இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பட வரிசையில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது துப்பாக்கி. விஜய் மற்றும் காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்த இந்தப் படத்தில் ஜெயராம், சத்யன் இருவரும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இயக்கம் ஏ ஆர் முருகதாஸ். தயாரிப்பு கலைப்புலி தாணு.
பல விதமான சர்ச்சைகளைத் தாண்டி வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. 10 நாட்களுக்குள் 100 கோடியை வசூல் செய்து விட்டது என்று கூறப்பட்ட துப்பாக்கி, சில நாட்களுக்கு முன்பு வரை 178.73 கோடியை வசூலித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்திரன், சிவாஜி படங்களை அடுத்து துப்பாக்கி மட்டுமே 100 கோடியை எட்டிப் பிடித்துள்ளது. வசூலைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தைப் பிடித்து விட்டார் விஜய். இந்த வருடத்தின் வெற்றி நாயகன் என்று விஜய்யை குறிப்பிட்டால் அது மிகையல்ல.
முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் சொல்லி வைத்தார் போன்று ஊத்திக் கொள்ள, நண்பன், துப்பாக்கி என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார் விஜய். ரசிகர்களின் அமோகமான ஆதரவினால் துப்பாக்கி படம் விரைவில் 200 கோடியை எட்டிப் பிடித்து விடும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment