VIJAY's PULI INTRO SONG WORTH Rs.5 CRORES | PULI | ரூ.5 கோடியில் 'புலி' முதல் பாடல்

விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் முதல் பாடலுக்காக 5 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான அரங்கு அமைந்து அதில் படமாக்கி இருக்கிறார்கள்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.